/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருது
/
மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருது
ADDED : ஏப் 12, 2025 11:16 PM
திருப்பூர்: சிறப்பாக செயல்படும் மகளிர் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு, தமிழக அரசால், மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. மகளிர் குழுக்கள் துவங்கி ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். 'ஏ' அல்லது 'பி' தர வரிசை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம், ஒரு முறை வங்கிக்கடன் பெற்று, தவணை தவறாமல், கடனை திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.
தரமதிப்பீட்டில், 'ஏ' அல்லது 'பி' தரவரிசை பெற்றிருக்க வேண்டும்; குறைந்தபட்சம், ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாகிகளை மாற்றம் செய்திருக்க வேண்டும்; குறைந்தது, இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
தகுதியான மகளிர் குழுவினர் மற்றும் கூட்டமைப்பினர், வரும், 30ம் தேதிக்குள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

