/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிறுவனங்களுக்கு மீண்டும் மஞ்சப்பை விருது
/
நிறுவனங்களுக்கு மீண்டும் மஞ்சப்பை விருது
ADDED : பிப் 25, 2025 07:02 AM
திருப்பூர்; பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு, மீண்டும் மஞ்சப்பை விருது வழங்கி வருகிறது.
தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் தலா மூன்று பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
முதல்பரிசு 10 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசு 5 லட்சம்; மூன்றாம் பரிசு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், 2024 - 25ம் ஆண்டுக்கான 'மீண் டும் மஞ்சப்பை' விருது வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களை உருவாக்கிய பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்கள், விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட அலுவலக இணையதளத்திலும், மாசுகட்டுப்பாடு வாரிய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, வரும் மே 1ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.