sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுப்பாதையில் ஏராளமான...  'பல்லாங்குழி; ஆட்டம் காணும் வாகனங்கள்

/

மாற்றுப்பாதையில் ஏராளமான...  'பல்லாங்குழி; ஆட்டம் காணும் வாகனங்கள்

மாற்றுப்பாதையில் ஏராளமான...  'பல்லாங்குழி; ஆட்டம் காணும் வாகனங்கள்

மாற்றுப்பாதையில் ஏராளமான...  'பல்லாங்குழி; ஆட்டம் காணும் வாகனங்கள்

2


ADDED : ஜன 25, 2026 06:34 AM

Google News

ADDED : ஜன 25, 2026 06:34 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் ஸ்டாப் ரவுண்டானா அருகே நெரிசல் ஏற்படுவதை தடுக்க, ரயில்வே மேம்பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்க, புஷ்பா ஸ்டாப்பில் 'நோ சிக்னல்' நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இதனால், புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் ரவுண்டானா சுற்றாமல், நேராக ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, பிருந்தாவன் ஓட்டல் வளைவு சென்று, வலதுபுறம் திரும்பி, மீண்டும் அவிநாசி ரோட்டை வந்தடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் போலீசாரால் செய்யப்பட்டுள்ளது.

நகரின் நெரிசல் மிகுந்த சாலைகளில் அவிநாசி சாலை முதன்மையானதாக இருப்பதால், நொடிக்கு நொடி மாற்றுப்பாதையில் வாகனங்கள் பயணித்து கொண்டே இருக்கிறது. ஆனால், சாலையில் நிலையே படுமோசமாக உள்ளது. படுபரிதாபமாக உள்ளது. வழிநெடுக குழிகள், பாதி சாலை வரை சேதமாகி, மண் நிறைந்து காணப்படுகிறது.

இரவில் தெருவிளக்கு இவ்விடத்தில் எரிவதில்லை. புதியதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து செல்கின்றனர். இருக்கும் குறுகிய சாலையில் ஒருவழிப்பாதையில் முன்னேறி வருபவர்கள் ஒருபுறம்.

பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகன டிரைவர்கள் குழிகளில் சக்கரம் இறங்காமல் இருக்க திடீரென வாகனத்தை இடது அல்லது வலதுபுறம் திருப்புவதால், பின்தொடர்ந்து வருபவர்கள் நிலைகுலைந்து போகின்றனர்.

மாநகராட்சி சாலையென நெடுஞ்சாலைத்துறையும், இந்த சாலை எங்களுக்கு வராது என மாநகராட்சியும் மாதக்கணக்கில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி தட்டிக்கழிப்பதால், குழி பெரியதாகி, விபத்தும் அதிகரிக்கிறது.

மாற்றுப்பாதை இப்படி இருந்தால், எப்படி பயணிக்க முடியும் என புலம்புகின்றனர், டிரைவர்கள். இந்த சாலையில் உள்ள குழிகளை மூடி, சாலையை சீரமைக்க வேண்டும் என்பது அவ்வழியாக தினசரி பயணிப்போரின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us