/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உழவே உயிர்' கருத்தை வலியுறுத்தி மாரத்தான்
/
'உழவே உயிர்' கருத்தை வலியுறுத்தி மாரத்தான்
ADDED : ஆக 10, 2025 11:11 PM

பல்லடம்; 'உழவே உயிர்' என்பதை வலியுறுத்தும் விதமாகவும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுல்தான்பேட்டை வின்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், 'நம்ம ஊரு மாரத்தான்' போட்டி நேற்று நடந்தது.
சுல்தான்பேட்டை தனியார் மண்டபத்தில் துவங்கி, செஞ்சேரிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வரை மாரத்தான் போட்டி நடந்தது.
மாவட்ட கவர்னர் செல்லா ராகவேந்திரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., கந்தசாமி, உ.உ.க., மாநில தலைவர் செல்லமுத்து ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ரோட்டரி மாவட்ட இயக்குனர் அங்கீதா தினேஷ், துணை கவர்னர்கள் ரமேஷ், சண்முக சுந்தரம் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவ - மாணவியர் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சப் கலெக்டர் சுதாகரன், ரோட்டரி நிர்வாகிகள் கனகராஜ், விஜயகுமார், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.