ADDED : ஜன 04, 2025 12:15 AM
திருப்பூர்; திருப்பூர் கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் அண்டு ஜூவல்ஸ் சார்பில், 'மார்கழி அருள் மழை' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.
தென்சேரிமலை திருநாவுக்கரசர் மடம் முத்துசிவராம சுவாமிகள், 'கொங்கு மண்டலம் ஆடல்வல்லான்' யூடியூப் சேனலை துவக்கி வைத்து, அருளாசி வழங்கினார். பாப்பீஸ் நிறுவனங்களின் தலைவர் சிவக்குமார் வாழ்த்தி பேசினார்.
'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்கிற தலைப்பில் சிவசண்முகம் பேசுகையில், 'நமது பண்பாடு, கலாசாரம், ஆன்மிகத்தை உலகம் முழுவதும் பரவச் செய்வதற்கு, அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். 2வது நாளான இன்று மாலை, 4:30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், 'இன்பமே எந்நாளும்'என் கிற தலைப்பிலும், நாளை 'குறைவிலா நிறைவே' தலைப்பிலும் சிவக்குமார் பேசுகிறார்.

