/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் தேர்த்திருவிழா பொருட்காட்சி ஏலம்; 4வது முறையாக ஒத்திவைப்பு

ADDED : ஏப் 09, 2025 10:18 PM

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஏப்., 17ம் தேதியும், பரிவேட்டை, வாணவேடிக்கை, 18ம் தேதியும், 19ம் தேதி, கொடியிறக்கம், மகா அபிேஷகம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, உடுமலை குட்டைத்திடலில், விளையாட்டு உபகரணங்கள், ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறுவ, வருவாய்த்துறை சார்பில் ஏலம் விடப்படுகிறது. இதற்கு, குறைந்த பட்ச ஏலத்தொகையாக, ஒரு கோடியே, 9 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
ஏல முன் வைப்பு தொகையாக, 27 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு, கடந்த, மார்ச் 17, 24, 28 தேதிகளில், மூன்று முறை ஏலம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தொகை கூடுதலாக உள்ளதாக கூறி ஏலம் கோரவில்லை.
நேற்று, 4வது முறையாக, உடுமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கவுரி சங்கர் தலைமையில் நடந்தது. நேற்றும், ஏலத்தொகையை குறைக்க வலியுறுத்தி யாரும் ஏலம் கோராததால், மீண்டும் , 4 வது முறையாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.