ADDED : ஏப் 10, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிக்கவுண்டன் பாளையம் புதுாரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.
கடந்த 5ம் தேதி பூச்சாட்டு பொங்கல் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு படைக்கலம் மற்றும் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம், சிறப்பு அலங்கார பூஜையுடன் நடந்தது. நேற்று பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு பால் மற்றும் மாவிளக்கு வைத்து பூஜை நடந்தது. மாலையில், பொங்கல் வைத்து, கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கம்பம் எடுத்துச்சென்று, நீர்நிலையில் விடப்பட்டது.
இன்று, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது.

