/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் தேர்த்திருவிழா நாளை ஆலோசனை கூட்டம்
/
மாரியம்மன் தேர்த்திருவிழா நாளை ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 28, 2025 07:45 AM
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம், நாளை நடக்கிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா, வரும் ஏப்., 1ம் தேதி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
தொடர்ந்து, 8ம் தேதி, கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 17ம் தேதி, திருத்தேரோட்டமும், 19ம் தேதி, மகா அபிேஷகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம், நாளை (29ம் தேதி), மாலை, 5:00 மணிக்கு, மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடக்கிறது. இதில், மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள், சமூகத்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்குமாறு, அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா தெரிவித்துள்ளனர்.

