/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வசதிகள் இல்லாத சந்தை வியாபாரிகள் ஆதங்கம்
/
வசதிகள் இல்லாத சந்தை வியாபாரிகள் ஆதங்கம்
ADDED : ஏப் 28, 2025 06:15 AM

அனுப்பர்பாளையம் : திருப்பூர் ஒன்றியம், கணக்கம் பாளையம் ஊராட்சி, சார்பில் ஆண்டிபாளையத்தில் வார சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்படும் வார சந்தைக்கு 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்கின்றனர். வெயில் கொளுத்துவதால், மாலை 4:00 மணிக்கு மேல்தான் செயல்பட தொடங்குகிறது.
வியாபாரிகள் கூறியதாவது:
சந்தையில் தளம் அமைக்கப்படவில்லை. மண் தரையில்தான் பொருட்களை வைத்து விற்பனை செய்கிறோம். மேற்கூரை வசதியும் இல்லை. துணியை மேற்கூரையாக பயன்படுத்துகிறோம். வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகிறோம். மழை நேரங்களில் வியாபாரம் செய்யமுடியாது.
குடிநீர் வசதிக்காக ஒரு டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் நிரப்புவதில்லை.
உயர் கோபுர மின் விளக்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லை. கூடுதல் மின் விளக்கு பொருத்த வேண்டும்.
கட்டணம் வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தளம், மேற்கூரை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

