/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்திப்பு பகுதிகளில் 'மார்க்கிங்' பணி! நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
/
சந்திப்பு பகுதிகளில் 'மார்க்கிங்' பணி! நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
சந்திப்பு பகுதிகளில் 'மார்க்கிங்' பணி! நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
சந்திப்பு பகுதிகளில் 'மார்க்கிங்' பணி! நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : ஏப் 25, 2025 11:28 PM

மடத்துக்குளம்: விபத்து பகுதிகளில், வாகனங்கள் வேகத்தை குறைக்கும் வகையில், 'தெர்மோ பிளாஸ்டிக் மார்க்கிங்' அமைக்கும் பணி, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், குமரலிங்கம்-காரத்தொழுவு உள்ளிட்ட மாவட்ட முக்கிய சாலைகள் பராமரிக்கப்படுகிறது.
கிராமங்களை முக்கிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இந்த ரோடுகளில், விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டு, அவ்விடத்தில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில், குறிப்பிட்ட பகுதிகளில், வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில், 'தெர்மோ பிளாஸ்டிக் மார்க்கிங்' பணி, குமரலிங்கம் ரோட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல், வேகத்தடை, ரோடு சந்திப்பு, பள்ளிப்பகுதிகள் மற்றும் விபத்து பகுதிகளில், பிரதிபலிப்பான் (ஸ்டட்) பதிக்கும் பணிகளும் மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.