/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவனை கடத்த முயன்ற முகமூடி நபர்களால் பரபரப்பு
/
மாணவனை கடத்த முயன்ற முகமூடி நபர்களால் பரபரப்பு
ADDED : மார் 12, 2024 04:19 AM
பவானி: அம்மாபேட்டை அருகேயுள்ள ஜோதிபுரம், பாலக்கணவனுாரை சேர்ந்தவர் குருசாமி, 34; வாழைத்தார் வெட்டும் கூலி தொழிலாளி. இவரின் ஒன்பது வயது மகன், அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து, 4:30 மணியளவில் சிறுவன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். பிற மாணவர்கள் சற்று தள்ளி பின்னால் வந்தனர். பாலகணவனுார்-ஜோதிபுரம் ரோட்டில் வந்த ஒரு கார், திடீரென சிறுவன் அருகில் நின்றது. அதிலிருந்து முகமூடி அணிந்த நான்கு பேர் இறங்கினர். சிறுவன் தலையில் சாக்குப்பையை போட்டு கடத்த முயன்றனர். சமயோசிதமாக சிறுவன் குனிந்து தப்பியோடி, அருகிலிருந்த புதருக்குள் மறைந்து கொண்டு சத்தமிட்டான்.
இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே, முகமூடி அணிந்த கும்பல், காரில் ஏறி தப்பி விட்டது.
இதுகுறித்து மாணவனின் தந்தை குருசாமி கொடுத்த புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில், கடத்த முயன்ற கும்பலை தேடி வருகின்றனர்.

