/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்ணரை சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ
/
மண்ணரை சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ
ADDED : டிச 23, 2024 04:53 AM

திருப்பூர் : திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சாய சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம், மண்ணரையில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் ரியாக்டர் மெஷினில் தீ பற்றி மளமளவென எரிய ஆரம்பித்தது. உடனடியாக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். சாயக்கழிவு ரசாயனங்கள் இருந்ததால், அதன் மீது பரவி எரிந்தது. அங்கு சென்ற திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்த காஸ் சிலிண்டர்களுக்கு பரவாமல் தடுத்து விரைந்து தீயை அணைத்தனர். சுத்திகரிப்புக் குழாய்கள் தீயில் சேதமடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.