/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிலிண்டருக்கு மாலை போட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
சிலிண்டருக்கு மாலை போட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிலிண்டருக்கு மாலை போட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிலிண்டருக்கு மாலை போட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 14, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: சமையல் எரிவாயு, பெட்ரோல், - டீசல் விலை உயர்வை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூர், 15 வேலம்பாளையம் நகர குழு சார்பில் ரங்கநாதபுரம் பஸ் ஸ்டாப் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர குழு உறுப்பினர் கவுசல்யா, தலைமை வகித்தார்.
செயலாளர் கவிதா உள்ளிட்டோர் பேசினர். சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்து அதற்கு மாலை போட்டு, கும்மியடித்து விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.