/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணித தின இணைய வழி வினாடி - வினா
/
கணித தின இணைய வழி வினாடி - வினா
ADDED : டிச 25, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கணித தின வினாடி - வினா போட்டி நடந்தது.
தேசிய கணித தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் 'ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் செய்த சாதனைகள்' என்ற தலைப்பில் இணைய வழி வினாடி - வினா போட்டி நடந்தது.
இப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் வீடுகளிலிருந்தும், மையங்களின் வாயிலாகவும் இணையவழியில் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டிகளை கலிலியோ அறிவியல் கழகத்தினர் ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தேசிய அறிவியல் தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது.