
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் அமராவதிபாளையம், சத்யா காலனியில் திங்கள் தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. பெரும்பாலும் இங்கிருந்து கேரளாவுக்கு தான் மாடுகள் வாங்கி செல்லப்படுகிறது.
இருக்கும் கால்நடைகளை வைத்து பட்டி பூஜையை (தோட்டங்களில் நடக்கும் மாட்டுப்பொங்கல் பூஜை) முடித்து விட்டு, அடுத்த வாரங்களில் தான் புதிய மாடுகளை வாங்க பெரும்பாலான விவசாயிகள் தயாராவார்கள்.
காங்கயம், நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மொத்தம், 105 கால்நடைகள் வந்திருந்தன. இதில், காங்கயம் இன மாடுகள் 25 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையும், பசுங்கன்றுகள் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும் விற்றன. 60 கால்நடைகள், 23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.