நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின விழா ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் கண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மாவட்ட அளவிலான மே தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது; மே 4ம் தேதி அரிசிக்கடை வீதியில் மே தின பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

