
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு தி.மு.க., தொழிற்சங்கத்தினர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். நகர செயலாளர் வசந்த் குமார் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, அவைத்தலைவர் ராயப்பன், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
n திருப்பூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், அண்ணா தொழிற்சங்க பேரவை பொன் விழா மற்றும் மே தின விழா நடைபெற்றது. காமராஜ் ரோட்டில் உள்ள அண்ணா ஓட்டல் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் கொடியேற்று விழா நடந்தது. ஓட்டல் சங்க செயலாளர் வினோத் தலைமை வகித்தார்.
மாவட்ட ஏ.டி.பி., செயலாளர் கண்ணபிரான் சங்க கொடியை ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.