/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சர்க்கரை'யாக வாழ்க்கை இனிக்கட்டுமே!
/
'சர்க்கரை'யாக வாழ்க்கை இனிக்கட்டுமே!
ADDED : நவ 14, 2024 04:47 AM
''கடந்த, 2021ம் ஆண்டில் நீரிழிவு நோயால், 67 லட்சம் பேர் இறந்தனர். அதே ஆண்டில், 53.7 கோடி பேர் இந்நோயுடன் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை, வரும், 2030ல் 64.3 கோடியாகவும், 2045ல், 78.3 கோடியாகவும் இருக்கும்,'' என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரத்தை அளிக்கிறது சர்வதேச நீரிழிவு அறக்கட்டளை.
'உடற்பயிற்சியின்மை, கட்டுப் பாடற்ற உணவு பழக்கம் உள்ளிட்ட பின்பற்றக் கூடிய விஷயங்களை பின்பற்றாமல் போவதே, சர்க்கரை நோய் ஏற்படக் காரணம். சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அது இதயம், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்' என்கின்றனர் மருத்துவர்கள்.
மருத்துவர்கள் கூறுகையில், 'சர்க்கரை நோய் என்பது, இன்று சர்வசாதாரணமாக பலருக்கும் ஏற்படுகிறது.
உணவு பழக்கம், உடற்பயிற்சின்மை தான் இதற்கு முக்கிய காரணம். எனவே, ஒவ்வொருவரும் மருத்துவர் அறிவுரைப்படி, குறிப்பிட்ட இடைவெளியில் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்,' என்றனர்.
நடப்பாண்டின், உலக நீரிழிவு நோய் தின கருப்பொருள் 'தடைகளை உடைத்தல், இடைவெளிகளை குறைத்தல்' என்பதாகும்.
வருமுன் காப்போம் என்பதற்கேற்ப, சரியான இடைவெளி யில் மருத்துவ பரிசோதனை செய்து கொள் வதன் வாயிலாக நீரிழிவு எனும், ஆயுளை குறைக்கும் நோயில் இருந்து தப்பிக்க முடியும்.
- இன்று, உலக நீரிழிவு தினம் -

