/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறுவடைக்கு தயாராக பூத்துக்குலுங்கும் மலர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டும்
/
அறுவடைக்கு தயாராக பூத்துக்குலுங்கும் மலர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டும்
அறுவடைக்கு தயாராக பூத்துக்குலுங்கும் மலர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டும்
அறுவடைக்கு தயாராக பூத்துக்குலுங்கும் மலர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டும்
ADDED : அக் 06, 2024 03:24 AM

திருப்பூர் : சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நெருங்கி வருவதால், செண்டு மல்லி, கோழிக்கொண்டை போன்ற பூக்கள் அறுவடைக்கு, விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இம்மாதத்தின் சிறப்பாக நவராத்திரி விழா அனைத்துப் பகுதிகளிலும் வழக்கமான உற்சாகத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 11ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படவுள்ளது.
விழாவின் போது, மலர் மாலைகள், தோரணங்கள், மலர்கள் பெருமளவு பயன்படுத்தப்படும். இதில் செண்டுமல்லி, கோழிக் கொண்டைப் பூ, செவ்வந்தி பூக்கள் ஆகிய ரக மலர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், முத்துார் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், பொங்கலுார், அவிநாசி பகுதிகளிலும் இது போன்ற பூ வகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு தற்போது வளர்ந்து மலர்ந்துள்ளது.இவற்றை அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த பூக்கள் பூஜை நாட்களின் போது, பயன்படுத்தப்படும் என்பதால் குறைந்த பட்சம் இரு நாள் முன்னதாக பூ மார்க்கெட் கடைகள் மற்றும் பூ வியாபாரிகள் கைகளில் சென்று சேர்ந்து விடும். அதற்கேற்ப இரண்டொரு நாளில் இந்த பூக்கள் அறுவடை செய்து வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.நடப்பாண்டில் இந்த பூக்கள் சாகுபடி நாட்களில் மழை ஓரளவு கை கொடுத்தது. இதனால், பூக்கள் விளைச்சல் எதிர்பார்த்த அளவில் வந்துள்ளதாகவும், நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.