/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும்: சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை
/
சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும்: சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை
சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும்: சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை
சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும்: சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை
ADDED : ஏப் 04, 2025 05:29 AM

திருப்பூர் : சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடாதீச்வர சங்கராசார்ய ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகளின் 75வது வர்தந்தி திருநாள் வைபவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதிருத்ர மஹாயாகம், ஸஹஸ்ரசண்டீ மஹாயாகம், வேத ஹவனம், பஞ்சாயதன தேவதா ஆராதனம் ஆயிரம், பத்தாயிரம், 75 லட்சம் மற்றும் கோடி எண்ணிகைகளில் மூலமந்திர ஜபங்கள் மற்றும் பாராயணங்கள் ஆகியன சிருங்கேரியில் மட்டுமல்லாமல், நம் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகில் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
அதே சமயத்தில், வேத-சாஸ்திர -புராண- இலக்கியங்களில் திறமை வாய்ந்தவர்களுக்கு வெகுமதி மற்றும் சன்மானங்களும் ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழாக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்யார் ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமியின் அருளுரை:
சாரதாம்பாளாகவே அருள் பாலித்துவரும் நம் குருவின் சேவையில் ஈடுபடும் மகத்தான அதிர்ஷ்டமும், பாக்கியமும் நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. அதன் அருமையை புரிந்து கொண்டு, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. சாதாரண கல்லுக்கும், நவரத்தினத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாவிட்டால், சாதாரண கற்களின் குவியலில் இருந்து ரத்தினத்தை பிரித்துக் காட்ட முடியாது. நம் குருநாதரின் பெருமையை புரிந்து கொள்ள, அவரது மகிமையை தெரிந்து கொண்டு போற்றுவதற்கு, நாம் நம்மை தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அனைவரின் துக்கங்கள் துாரமாகட்டும். ஹிந்து மதம் என்றழைக்கப்படும் நம் சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும். அனைவரும் நலன்களை பெறட்டும்; சமுதாயமும், தேசமும் பெருமளவில் செழிக்கட்டும் என்று பிரார்த்தித்து, அனைவருக்கும் எங்களுடைய நாராயண ஸ்மரண பூர்வகமான ஆசிகளை வழங்குகிறோம்.
இவ்வாறு சிருங்கேரி சங்கராச்சார்யார் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி அருளுரையில் குறிப்பிட்டுள்ளார்.