/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டி பெருகணும்... பால் பானை பொங்கணும்! மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
/
பட்டி பெருகணும்... பால் பானை பொங்கணும்! மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
பட்டி பெருகணும்... பால் பானை பொங்கணும்! மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
பட்டி பெருகணும்... பால் பானை பொங்கணும்! மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 16, 2025 04:24 AM

திருப்பூர் : மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு, மாடு வளர்ப்பவர்கள் நேற்று, பட்டிப்பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு 'காவி' பூசி, விபூதி, மஞ்சள், குங்குமம் வைத்தும், புதிய கயிறுகளை மாற்றியும், மாலை அணிவித்தும் அலங்கரிக்கப்பட்டது. கழுத்து மற்றும் கொம்புகளில் சிறிய மணி கட்டப்பட்டது.
பட்டிப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் என, இரண்டு பொங்கல் வைத்து, மாடுகளுக்கு தீபாராதனை செய்து வழிபட்டு, கால்நடைகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுக்கப்பட்டது.
மாட்டுத்தொழுவத்தில், சிறிய குளம் அமைத்து தண்ணீரை தேக்கி வைத்து, அதற்கு முன், சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல், கரும்பு, முறுக்கு உள்ளிட்டவற்றை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
பல குடும்பங்களை வாழ வைக்கும் பசுமை மாடுகளும் அலங்கரிக்கப்பட்டு, மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'பட்டியில் பொங்கல் வைத்து, பசுமாடுகளை கொண்டாடுவதன் மூலம், பட்டி பெருகும் என்பது நம்பிக்கை. 'நாடு செழிக்க வேணும்... நல்ல மழை பெய்ய வேணும், ஊரு செழிக்க வேணும், உகந்த மழை பெய்ய வேணும்.
கழனியில ஸ்ரீதேவி நிற்கனும், பட்டி பெருகோணும், பால் பானை பொங்க வேணும்.. பொங்கலோ பொங்கல், ” என்று பாடி மகிழ்ச்சியுடன் வழிபட வேண்டும்,' என்றனர்.
l பொங்கலுார், அலகுமலை அருகேயுள்ள வேலாயுதம்பாளையத்தில், மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஊராட்சி முன்னாள் சேர்மன் சண் முகம், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி, ஆவின் முன்னாள் இயக்குனர் குமார், தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சசிகுமார் பங்கேற்றனர். மாடுகளுக்கு பொங்கல் படைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆசிரியர் அசோக்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.