/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமுருகன்பூண்டியில் மா.கம்யூ.வினர் தர்ணா
/
திருமுருகன்பூண்டியில் மா.கம்யூ.வினர் தர்ணா
ADDED : அக் 09, 2025 12:04 AM

அவிநாசி; திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நல்லாறு முழுவதுமாக புதர்மண்டி மாசு ஏற்பட்டு சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் உடனடியாக துார்வார வேண்டும்; சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி திருமுருகன் பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
திருமுருகன் பூண்டி நகராட்சி கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், வேலுசாமி, பாலசுப்ரமணியம், வையாபுரி, கவுன்சிலர் தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நல்லாற்றை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் கோஷமிட்டனர்.