/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வு நெருங்குகிறது; ஆசிரியர்கள் இல்லை
/
தேர்வு நெருங்குகிறது; ஆசிரியர்கள் இல்லை
ADDED : அக் 09, 2025 12:05 AM
திருப்பூர்; அமைச்சர் கோவி.செழியன், 'அரசு கல்லுாரிகளில், 2,700 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,' என அறிவித்தார்.
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா, எல்.ஆர்.ஜி., மகளிர், காங்கயம், தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம் ஆகிய ஏழு கல்லுாரிகள் உள்ளன. அதிக மாணவர், மாணவியர் (808 இடங்கள்) படிக்கும் கல்லுாரியாக, சிக்கண்ணா உள்ளது.
பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் அதிக மாணவியர் (1085 இடங்கள்) படிக்கின்றனர்.புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளை விட இக்கல்லுாரிகளுக்கு உதவி பேராசிரியர் நியமனம் உடனடி தேவையாக உள்ளது.
மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில், 60 - 80 பணியிடம் காலியாக உள்ளது. சில இடங்களில் மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரு ஆசிரியர் பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. ஆசிரியர் விடுப்பு என்றால், அன்றைய நாளுக்குரிய படிப்பு மாணவர்களுக்கு கிடைக்காமல் போகிறது.
உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியாகும் வேகம் பணியிடங்களை நிரப்புவதிம், தேர்வு செய்தவர்களுக்கு பணி வழங்குவதிலும் இருப்பதில்லை. நடப்பு கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வு துவங்க உள்ளது.
அரசு கல்லுாரிகளில் கற்றல், கற்பித்தல் மேம்பட, கல்லுாரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெற, உதவி பேராசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன விஷயத்தில் தாமதம் செய்யக்கூடாது.