/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆகாசராயர் கோவிலில் அளவீடு; மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
/
ஆகாசராயர் கோவிலில் அளவீடு; மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
ஆகாசராயர் கோவிலில் அளவீடு; மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
ஆகாசராயர் கோவிலில் அளவீடு; மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்
ADDED : ஜன 24, 2025 11:32 PM

அவிநாசி; அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ஆகாசராயர் கோவிலில், கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் துவங்கி கடந்த ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வருகிறது.
கோவிலில் உள் பிரகாரத்தில் ஒரு நுழைவாயிலும் வெளிப்பிரகாரத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய நுழைவாயிலும் கட்டப்பட்டு வருகிறது. வெளி பிரகாரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அலங்கார வளைவு பகுதி அமைந்துள்ள இடம் வருவாய்த்துறைக்கு சொந்தம் என ஒரு தரப்பினரால், தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டு தற்போது வெளி அலங்கார வளைவு கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று வருவாய்த்துறையில் இருந்து கோவிலின் நிலம் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய வருவாய்த் துறையினர் வந்தனர். இதையறிந்து திரண்ட அப்பகுதியினர் நில அளவீடு செய்யக்கூடாது என எதிர்பார்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் திரும்பினர்.
முன்னதாக, கோவில் செயல் அலுவலர் சரண்யாவை, அவரின் அலுவலகத்தில் வைத்து முற்றுகையிட்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள பணிகள் குறித்து அரசாணையை காண்பிக்க வேண்டும் என்று கேட்டனர்.
ஆனால், செயல் அலுவலர் தர மறுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன்பின், அவிநாசி தாசில்தார் சந்திரசேகரிடம், ராயன் கோவில் காலனி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று முன் அலங்கார வளைவு கட்டுதல் சம்பந்தமாக மனு அளித்தனர்.
'கும்பாபிஷேக திருப்பணிகளில் உள் அலங்கார வளைவு, வெளி அலங்கார முகப்பு வளைவு மற்றும் கோவில் நிலங்கள் அளவீடு தொடர்பாக தாசில்தார் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு நடத்துவது,' என முடிவு செய்யப்படும் என தாசில்தார் கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

