ADDED : ஏப் 10, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை நகராட்சிக்கு சுற்றுப்புற பகுதிகளிலுள்ள விவசாயிகள், விளைவிக்கும் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
நகராட்சி வளாகத்தில், ராஜேந்திரா ரோடு வணிக வளாகம் பகுதியில், மாடு, ஆடு, மீன், கோழி என, 50க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் அமைந்துள்ளன. காய்கறி, மளிகை கடைகளுக்கு மத்தியில், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இதனால், விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, காய்கறி சந்தை வளாகம் முழுவதும் இறைச்சி கடைகள் கொண்ட வளாகமாக மாறியுள்ளதாக, விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

