ADDED : அக் 01, 2026 07:51 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: காந்தி ஜெயந்தி நாளில், மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள இறைச்சிக்கடைகளை மூட வேண்டுமென, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும், அக். 2ம் தேதி (நாளை) முழுமையாக மூடப்பட வேண்டும்.
தடையை மீறி கடைகள் செயல்பட்டால், பொது சுகாதார மற்றும் மாநகராட்சி சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று தெரிவித்துள்ளார்.
