/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளி மாணவர்கள் மருத்துவ முகாம்
ADDED : ஜன 28, 2025 05:20 AM
பல்லடம் -: மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மேற்கு பல்லடம் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் திட்ட இயக்குனர் அண்ணாதுரை தலைமை வகித்தார். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் முகாமை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சசிகலா, ராமகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், மூளை வளர்ச்சி குறைபாடு, கண், காது, கை, கால் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள குழந்தைகள் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம், 93 மாற்றுத்திறன் மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். இதில், 32 பேருக்கு புதிதாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஐந்து மாணவர்களுக்கு இலவச உபகரணங்களும், 50 மாணவர்களுக்கு ரயில் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டன. பல்லடம் வட்டார வளமைய பொறுப்பாளர்கள், பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.