/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் மருத்துவ முகாம்; சுகாதாரத்துறைக்கு வலியுறுத்தல்
/
கிராமங்களில் மருத்துவ முகாம்; சுகாதாரத்துறைக்கு வலியுறுத்தல்
கிராமங்களில் மருத்துவ முகாம்; சுகாதாரத்துறைக்கு வலியுறுத்தல்
கிராமங்களில் மருத்துவ முகாம்; சுகாதாரத்துறைக்கு வலியுறுத்தல்
ADDED : டிச 25, 2024 08:12 PM
உடுமலை; பருவநிலை மாற்றத்தால், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அதிகரிப்பதால், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க, சுகாதாரத்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பனிக்காலம் துவங்கியும், சில நாட்கள் பரவலான மழையாகவும், காலை நேரங்களில் வெப்பம் அதிகரித்தும், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால், தொற்று காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில் கிராமங்களில் சளி, காய்ச்சல் இருமல் பிரச்னையால் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாமல் பெற்றோரும் விடுவதால், அடுத்தடுத்து பரவுகிறது.
இதனால் பாதிப்பின் எண்ணிக்கை உயர்கிறது. சில நாட்களாக, தக்காளி காய்ச்சல் என்பதும் பரவலாக குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதனால் சாதாரண நோய்த்தொற்றுக்கும் பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல், மருத்துவரிடம் செல்வதா இல்லையா என குழப்பமடைகின்றனர்.
தற்போது அரையாண்டு விடுமுறையாக இருப்பினும், நோய்த்தொற்றுக்கு பயந்து குழந்தைகளை வெளியில் விளையாடவும் பெற்றோர் அனுமதிப்பதில்லை.
நோய்த்தொற்றை கட்டுபடுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊராட்சிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

