/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்
/
குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்
குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்
குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்
ADDED : டிச 18, 2025 08:16 AM
திருப்பூர்: திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலத்திட்டம், குழந்தை திருமணம் செய்யப்பட்ட, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பல வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கை குறித்துவிவாதித்தனர்.
குழந்தைகளின் பிரச்னை கண்டறிய கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அளவிலும் 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்தவும், பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கவும், பெற்றோர் ஆதரவில்லாத குழந்தைகளை அன்புக்கரங்கள் திட்டத்தில் இணைப்பது பற்றியும் ஆலோசனை நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா,தன்னார்வ நிறுவன பிரதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.