/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விசைத்தறி கூடங்களில் கைத்தறி ரகம் கூடாது'
/
'விசைத்தறி கூடங்களில் கைத்தறி ரகம் கூடாது'
ADDED : டிச 18, 2025 08:08 AM

பல்லடம்: திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயற்குழு ஆலோசனைக் கூட்டம், சுக்கம்பாளையம் சின்னம்மன் மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு, சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். முன்னதாக, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி, கைத்தறி ரகங்களை கைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எந்த சூழலிலும், கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது.
இது சட்டப்படி குற்றம் என்பதால், விசைத்தறியாளர்கள் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்யக்கூடாது என, கைத்தறித்துறை உதவி இயக்குனர் ஜெயகணேசன் விசைத்தறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'தமிழக அரசு அறிவித்த நாடா இல்லா ரேப்பியர் கிட் தறிகளை உருவாக்கும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் மானியம், விண்ணப்பித்ததும் உடனடியாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன், நெட் மீட்டர் வசதியுடன் சோலார் மின் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சக்திவேல் நன்றி கூறினார்.

