ADDED : டிச 16, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் நகர மா.கம்யூ., கட்சி சார்பில், விடுதலை போராட்ட வீரர் ராமமூர்த்தி 116ம் ஆண்டு நினைவு தினம், கட்சியின் முன்னாள் நகர செயலாளர் சுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
அனுப்பர்பாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் ஆகிய இரு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் இருவரது உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நகர செயலாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

