ADDED : அக் 23, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சாம்பார் பூசணி ஒரு மாதமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுத பூஜைக்கு அதிகளவில் விற்பனையாகும் என வியாபாரிகளும், அதிகளவில் கொள்முதல் செய்தனர். ஆயுத பூஜை முடிந்தபின், சாம்பார் பூசணிக்கான தேவை குறைந்துள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கொள்முதல் செய்த பூசணிக்காய் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது.
இதனால், சாம்பார் பூசணியை கேட்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் புலம்புகின்றனர்.

