ADDED : ஜன 29, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி தினசரி மார்க்கெட் வியாபாரிகள், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் செயல் அலுவலர் சண்முகம் ஆகியோரிடம் அளித்த மனு விவரம்:
அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டில், 16 ஆண்டாக வியாபாரம் செய்து வந்தோம்.
மார்க்கெட்டை சீர்படுத்தி தருவதாக கூறியதால், புதிய பஸ் ஸ்டாண்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக கடை வைத்துள்ளோம். பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால், பழைய பஸ் ஸ்டாண்ட் புதிய வணிக வளாக கட்டடத்தில் எங்களுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

