/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணையுங்க! அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
/
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணையுங்க! அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணையுங்க! அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
நகராட்சியுடன் கணக்கம்பாளையத்தை இணையுங்க! அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
ADDED : ஜன 24, 2025 10:22 PM

உடுமலை ;உடுமலை நகராட்சியுடன், வருவாய் கிராமமான கணக்கம்பாளையத்தை இணைக்காததைக் கண்டித்து, அனைத்துக்கட்சியினர், குடியிருப்போர் நல சங்கம் சார்பில், தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
உடுமலை நகராட்சியுடன், 13 ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. பெரும்பாலான ஊராட்சிகளும் ஆதரவு தெரிவித்து, தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பின.
ஆனால், கடந்த மாதம் வெளியிடப்பட்ட உத்தேச பட்டியலில், பெரியகோட்டை ஊராட்சி மட்டும் இணைக்கப்பட்டது.
ஆனால், உடுமலை நகராட்சியின் மூன்று எல்லையாகவும், வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில், உடுமலை நகராட்சி பகுதி, கணக்கம்பாளையம் கிராமமாக உள்ள நிலையில், கணக்கம்பாளையம் ஊராட்சி இணைக்கப்படவில்லை.
அரசுக்கல்லுாரி, கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகம், ஐ.டி.ஐ., என அரசு அலுவலகங்கள், மின் மயானம் என நகர விரிவாக்கம் முழுவதும், இந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திட்டமிட்டு நகராட்சியுடன் இணைக்காமல், ஒரு சிலருக்காக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இது குறித்து, கணக்கம்பாளையத்திலுள்ள குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், தி.மு.க.,- அ.தி.மு.க., -  காங்., - பா.ஜ., - கம்யூ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில், உடுமலை நகரின் அருகில், வளர்ச்சியடைந்த நகரப்பகுதியாக கணக்கம்பாளையம் ஊராட்சி உள்ளது. குடிநீர், சுகாதாரம், ரோடு என அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், நகராட்சியுடன் இணைத்தால், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
எனவே, கணக்கம்பாளையம் ஊராட்சியை, உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும். இது குறித்து, தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிப்பது, நாளை நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மனு அளித்து தீர்மானம் நிறைவேற்றுதல் மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்துவது, என முடிவு செய்யப்பட்டது.

