/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒவ்வொரு பாட்டிலும் 'கண்ணி வெடி'
/
ஒவ்வொரு பாட்டிலும் 'கண்ணி வெடி'
ADDED : செப் 30, 2024 05:34 AM
பல நேரங்களில், விளைநிலங்கள், பி.ஏ.பி., வாய்க்கால் பகுதிகள்தான், 'குடி'மகன்களுக்கு பாராக இருக்கின்றன. பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், நிழற்குடைகளை விட்டுவைப்பதில்லை.
குடித்துவிட்டு துாக்கி வீசப்படும் கண்ணாடி மது பாட்டில்கள் எல்லா இடங்களிலும் உடைந்து சிதறி கிடக்கின்றன. கண்ணாடி பாட்டில்கள் கால்நடைகள் மேயும் பொழுது அவற்றின் நாக்கை வெட்டுவதால் கால்நடைகள் இறந்து போகின்றன. உழவு ஓட்டுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகளை விவசாயிகள் வெறும் காலுடன் செய்கின்றனர். உடைந்து கிடக்கும் பாட்டில்கள் அவர்களின் காலை கிழித்து விடுகின்றன. இதனால் பல ஆயிரம் ரூபாய் மருத்துவமனைக்கு செலவழிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
வாய்க்கால், புறம்போக்கு நிலங்கள், விவசாய நிலங்கள் என எங்கும் நிறைந்து கிடக்கும் காலி மது பாட்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கண்ணி வெடியாய் மாறி விவசாயத்தை, விவசாயிகளை, கால்நடைகளை அழ வைக்கின்றன. நகரங்களில் செய்யப்படும் துாய்மைப் பணி போன்று கிராமங்களில் செய்யப்படுவதில்லை. இவற்றால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை எதிர்நோக்கி உள்ள விவசாயம் மெல்ல அழியும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

