ADDED : டிச 25, 2024 11:29 PM

அவிநாசி,; முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் அனுஷ்டிக்கப்பட்டது. அவிநாசி நகர பொறுப்பாளர் ஜெயபால் தலைமையில், நடராஜன், முஸ்தபா, சரவணன், ஐடி பிரிவு கோகுல் கார்த்திக் உட்பட கட்சி நிர்வாகிகள், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.
அவிநாசி தெற்கு ஒன்றியம் சார்பில், கருமாபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் விஜயானந்த், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில், கருவலுாரில் நடந்த நிகழ்ச்சியில், ரவிக்குமார், காத்தவராயன், திரிபுரசுந்தரன், சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். வடக்கு ஒன்றியம், சேவூரில், ஒன்றிய செயலாளர் வேலுசாமி தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் சின்னக்கண்ணு, சுப்ரமணியம், மாவட்ட வழக்கறிஞர் அணி கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

