/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுஷ்டிப்பு
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுஷ்டிப்பு
ADDED : டிச 25, 2024 07:30 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில், பார்க்ரோடு எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன் தலைமையில், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி, மன்ற தலைவர் முருகநாதன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சியின், 42வது வார்டு, கே.வி.ஆர்., நகர், கொடிக்கம்பம், கே.வி.ஆர்., நகர் பஸ் ஸ்டாப், செல்லம் நகர் பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள், கறுப்பு சட்டை அணிந்து, நிகழ்ச்சியில் பங்கேற்று, மலர் அஞ்சலி செலுத்தினர்.