ADDED : ஜன 18, 2025 12:21 AM

திருப்பூர், ;மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,ன், 108 வது பிறந்த நாள் விழா, நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், மாநகராட்சி எதிக்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர் கருணாகரன், இணை செயலாளர் சங்கீதா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தன், ரங்கசாமி உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கினர்.
திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பெருமாநல்லுார் நால் ரோட்டில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், அமைப்பு செயலாளர் சிவசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன், ஒன்றிய அவை தலைவர் மகாராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.