sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்! விழிப்புணர்வு கருத்தரங்கில் பெருமிதம்

/

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்! விழிப்புணர்வு கருத்தரங்கில் பெருமிதம்

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்! விழிப்புணர்வு கருத்தரங்கில் பெருமிதம்

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்! விழிப்புணர்வு கருத்தரங்கில் பெருமிதம்

1


ADDED : ஜூலை 04, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:32 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'திருப்பூரில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் பணியாற்றுகின்றனர்,' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், கருத்து தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்நலன், சுகாதாரம் மற்ற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருந்தரங்கு, ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. துணை தலைவர் ராஜ்குமார், நெறிமுறை வர்த்தக குழு பிரதிநிதி அருணா முன்னிலை வகித்தார்.

திருப்பூர், ஜூலை 5-

தொழிற்சங்க பிரதிநிதிகள் ரவி மற்றும் சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.,), சம்பத் (சி.ஐ.டி.யு.,), பாலசுப்பிரமணி (எல்.பி.எப்.,), முத்துசாமி (ஹெச்.எம்.எஸ்.,), மாதவன் (பி.எம்.எஸ்.,), மனோகர் (டி.டி.எம்.எஸ்., ), சேவ் அமைப்பு சார்பில் வியாகுலமேரி, 'கேர்-டி' அமைப்பு பிரதிநிதி பிரிதிவ்ராஜ் உள்ளிட்டோர் பேசினார்.

தவிர்க்க முடியாத சக்தி

--------------------

தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன்:

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், திருப்பூரில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் பணியாற்றி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளரின் கோரிக்கைகள், குறைகள், முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படுகின்றன. பனியன் தொழில் வளர்ச்சியால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை, புலம்பெயர் தொழிலாளர் வாயிலாக நிவர்த்தி செய்யப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், திருப்பூரின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டனர்.

விழிப்புணர்வு குறும்படம்

---------------------

ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி:

திருப்பூரில், பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் என, அனைத்து இடங்களிலும், வடமாநில தொழிலாளர் கூடுதல் கவனத்துடன் நடத்தப்படுகின்றனர். அவர்களும், அச்சமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர். வடமாநில தொழிலாளர் தொழில் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக்காக, குறும்படமாக தயாரித்து, அவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்படும். தொழிலாளர்களின் குழந்தைகளும், தடையின்றி கல்வி பயில உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கப்படும். வடமாநில தொழிலாளர், தமிழகத்தின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளை அறியவும், தொழில் குறித்த தகவல்களை பெறவும், புதிய வழிகாட்டி கேயேடு தயாரித்து, அந்தந்த மொழிகளில் அச்சிட்டு வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

குழந்தைகளின் கல்வி முக்கியம்


ஜவுளித்துறை நெறிமுறை வர்த்தக குழு மூத்த ஆலோசகர் லாரன்ட் அர்னோன்:

தொழிலாளர்களுக்கு, தங்குமிடம், உணவு, மருத்துவம் கிடைக்க வேண்டும். அவர்களது குழந்தைகளுக்கு கல்வியும் தடையின்றி கிடைக்க வேண்டும். நிறைவான சம்பளம், போனஸ் போன்ற பாதுகாப்பும் கிடைக்க வேண்டும். காலநிலை மாற்றம், பணிச்சுமை, பாலியல் வன்முறைகளில் இருந்து பெண் தொழிலார்கள் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும். அப்போதுதான், தொழில் செழிப்பாக வளரும்.

2 லட்சம் பேர் பதிவு



தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப்பிரிவு இணை இயக்குனர் சரவணன்:

தொழிற்சாலைகளில் குற்றம் நடப்பதை தடுக்க, சரியான தீர்வை வழங்க வேண்டும். தொழிலாளர் வளர்ச்சி பெறும் போதுதான், தொழில் வளர்ச்சி அடைகிறது. புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை சேகரிக்க ஏதுவாக, தமிழக அரசு இணைய வசதியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், இதுவரை, இரண்டு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

வீட்டுவசதி ரொம்ப முக்கியம்


சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுசெயலாளர் முருகசாமி:

படித்த இளைஞர்கள் வேறு பணிக்கு செல்வதால், உள்ளூரில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுகிறது; புலம்பெயர் தொழிலாளரை கொண்டு சமாளிக்கிறோம். வீட்டுவசதி பெரும் குறையாக இருக்கிறது. மத்திய, மாநில அரசு திட்டத்தில், வீட்டுவசதி உருவாக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளரின் மொழி பிரச்னையை முதலில் தீர்க்க வேண்டும். ஆதார் விவரங்களுடன் முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். மதுக்கடை செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.

உறுதியான மருத்துவ வசதி


சி.எஸ்.இ.டி., நிர்வாகி பாஸ்கரன்:

தொழில் மட்டும் வளர்ந்தால் போதாது, தொழிலாளர்களும் வளர்ச்சி பெற வேண்டும். உடல் ஆரோக்யம் அதிகம் பாதிக்கப்படுவதால், ஒவ்வொரு தொழிலாளிக்கும், இ.எஸ்.ஐ., சட்ட பாதுகாப்பும், மருத்துவமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற, இ.டி.ஐ. ஆலோசகர் அருணா, ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி, இ.டி.ஐ. மண்டல ஆணையர் ராணா அலோக் சிங், நிர்வாக இயக்குனர் கில்ஸ் பால்டன், தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன், இ.டி.ஐ முதன்மை ஆலோசகர் லாரன்ட் அர்னோன், ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ஆனந்த்.

அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்

தன்னார்வ அமைப்பின் நிர்வாகி சங்கரநாராயணன் பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு மாநிலத்தவரும் வசிக்கின்றனர். இம்மாவத்தில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும், எட்டு முதல், 10 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகின்றனர். எங்கள் அமைப்பு, தொழிலாளர்களுக்கு எய்ட்ஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு, அனைத்து உதவியும் செய்து வருகிறோம்,' என்றார்.








      Dinamalar
      Follow us