/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
/
பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2024 12:28 AM

திருப்பூர் : ஆவின் பால் நிறுவனம், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக, பால் உற்பத்திக்கு வழங்கப்படும், ஒரு லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவது நிறுத்தியுள்ளது; தற்போதைய விலைவாசி அடிப்படையில் பாலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் உற்பத்தி விலை அதிகரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊத்துக்குளி தாலுகா பகுதி பால் உற்பத்தியாளர்கள் நேற்று செங்கப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பால் உற்பத்தியாளர் சங்க தாலுகா தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். கிளை சங்கங்களைச் சேர்ந்த முருகசாமி, சுப்ரமணி, கிருஷ்ணன், பழனிசாமி, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், துணை செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். இதில் திரளாக கலந்து கொண்ட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.