தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'சீறிப்பாய்ந்த' மினி பஸ்; சிறைபிடித்த பொதுமக்கள்

'சீறிப்பாய்ந்த' மினி பஸ்; சிறைபிடித்த பொதுமக்கள்

'சீறிப்பாய்ந்த' மினி பஸ்; சிறைபிடித்த பொதுமக்கள்


UPDATED : ஆக 20, 2026 06:15 PM

ADDED : ஆக 20, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 06:15 PM ADDED : ஆக 20, 2026 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூரில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போட்டியில், விதிகளை மீறி அதிவேகமாக இயக்கப்படும் மினி பஸ்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பி.என். சாலையில் வாகனங்களை உரசியபடி அதிவேகமாக சென்ற மினி பஸ்சை, ஆத்திரமடைந்த டூவீலர் ஓட்டிகள் வழிமறித்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் நோக்கிச் சென்ற அந்த பஸ், பி.என். சாலையில் அதிவேகமாகவும், ஏர் ஹாரன் ஒலித்தபடியும் சென்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் பொதுமக்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பொதுமக்கள் கூறியதாவது:அடுத்தடுத்த நிறுத்தங்களுக்கு முந்திச் செல்ல வேண்டும் என்ற போட்டியில், பல மினி பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 'ரேஸ்' விடுவதுபோல் இயக்கப்படுகின்றன. பேரிகார்டு பகுதிகளிலும் ஏர் ஹாரன் அடித்தபடி செல்கின்றனர். இதனால் டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பி.என். சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் வேகக் கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமீறும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர் ஹாரன்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us