ADDED : ஆக 21, 2026 05:21 PM
திருப்பூர், ஆக. 22–
வடக்கு குறுமைய போட்டிகளில் ஏ.பி.எஸ். பள்ளி மாணவர்கள் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் அபார வெற்றி பெற்றனர்.
இளையோர் பிரிவு சதுரங்கத்தில் யாழினியும், குத்துச்சண்டையில் நிக்கிலும், நீச்சலில் திஷாந்தும் (50 மீ. பட்டர்பிளை, 100 மீ. ப்ரீஸ்டைல்) தங்கப்பதக்கங்களை வென்றனர். மூத்தோர் பிரிவு நீச்சலில் தீபிகா (100 மீ ப்ரேக்ஸ்டரோக், 200 மீ. ப்ரீஸ்டைல்), லக்ஷன் (50 மீ, 100 மீ, 200 மீ பேக்ஸ்ட்ரோக்) ஆகியோரும், குத்துச்சண்டையில் சஞ்சய், சஞ்சய் தர்ஷன் ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்றனர். மெய்ப்புகழ்வன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
வளைகோல் பந்தாட்டத்தில் மாணவிகள் இளையோர், மிகமூத்தோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் இரண்டாமிடமும் பிடித்தனர். மாணவர்கள் மிக மூத்தோர் பிரிவில் முதலிடமும், இளையோர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர்.
இவர்களை தாளாளர் சரவணக்குமார், தலைவர் பட்டுலிங்கம், பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
––
வடக்கு குறுமைய போட்டிகளில் வெற்றிவாகை சூடிய ஏ.பி.எஸ். பள்ளி மாணவர்கள்.
