/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எம்.சி., பொது பள்ளியில் மினி மராத்தான் போட்டி
/
கே.எம்.சி., பொது பள்ளியில் மினி மராத்தான் போட்டி
ADDED : பிப் 17, 2024 01:28 AM

திருப்பூர்;பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பொது பள்ளியில், மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.பள்ளி தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா ரட்சாம்பிகை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்விசார் நலன் குறித்த விழிப்புணர்வை, 5 கி.மீ., வரை கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை, பள்ளி தலைமை செயல் அதிகாரி வழங்கினார்.
பள்ளி முதல்வர் சீனிவாசன் வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.