தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/துாய்மைப்பணியாளருக்கு குறைந்தபட்ச ஊதியம்?

துாய்மைப்பணியாளருக்கு குறைந்தபட்ச ஊதியம்?

துாய்மைப்பணியாளருக்கு குறைந்தபட்ச ஊதியம்?


UPDATED : அக் 14, 2026 06:09 PM

ADDED : அக் 14, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:09 PM ADDED : அக் 14, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: உள்ளாட்சித் துறை துாய்மைப் பணியாளர்களுக்கு நவம்பர் முதல் குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், பி.எப்., இ.எஸ்.ஐ. பிடித்தங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் 10 முதல் 12 மாவட்டங்களில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கடந்த வாரம் நான்கு நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த முறையைக் கைவிட்டு, பல ஆண்டுகளாகப் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்புப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம், சம்பள ரசீது வழங்குவதுடன், பி.எப்., இ.எஸ்.ஐ. பிடித்தங்களை முறைப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தீபாவளி போனஸ், நாள்தோறும் ரூ.100 உணவுப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) நிர்வாகிகள், நகராட்சிகளின் இயக்குனர், துணை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் கூறுகையில், ‘‘தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். துாய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். புதிய ஊதிய மாற்றம் நவம்பர் முதல் அமலுக்கு வரும் என நம்புகிறோம்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us