/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பில்லுார் அணையில் அமைச்சர் ஆய்வு; பல்லடத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
/
பில்லுார் அணையில் அமைச்சர் ஆய்வு; பல்லடத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
பில்லுார் அணையில் அமைச்சர் ஆய்வு; பல்லடத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
பில்லுார் அணையில் அமைச்சர் ஆய்வு; பல்லடத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஆக 26, 2025 11:07 PM
பல்லடம்; பல்லடம் தாலுகாவில் வசிக்கும் மக்களுக்கு அத்திக்கடவு, பில்லுார் மற்றும் மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் கீழ், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை என்றும், அதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், அவ்வப்போது குடங்களுடன் ரோட்டுக்கு வருவதும், அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்புவதும் வாடிக்கை.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டாரத்துக்கு, இன்னும், கோவை மாவட்ட பகுதியில் இருந்துதான் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
பல்லடம் நகராட்சிக்கு, தினசரி, 45 லட்சம் லி., குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், 32 லட்சம் லி., மட்டுமே வழங்கப்பட்டு வருவதால்தான், குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக, சமீபத்தில் பல்லடம் வந்த கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம், நகராட்சி தலைவர் கவிதாமணி புகார் அளித்திருந்தார். இதனையறிந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பில்லுார் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் சாமிநாதன், பில்லுார் அணையில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து, பல்லடம் நகராட்சிக்கு, 47 லட்சம் லி., குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆங்காங்கே மீட்டர் பொருத்தி கண்காணிக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் சீராக்கப்படும் என்றும், கூடுதல் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பில்லுார் குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.