/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரூரில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்
/
கரூரில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்
கரூரில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்
கரூரில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்
ADDED : அக் 03, 2025 10:50 PM

திருப்பூர்:
கடந்த செப்., 27ம் தேதி த.வெ.க. தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 33, செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த கோகுல பிரியா, 29 ஆகியோர், கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்.
பலியானோர் குடும்பத்துக்கு, காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் ஆறுதல் கூறி, இரண்டு குடும்பங்களுக்கும் தலா பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ்ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.