/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட் கட்டுமான பணிகள் விரைவுபடுத்த வேண்டுகோள்
/
கோர்ட் கட்டுமான பணிகள் விரைவுபடுத்த வேண்டுகோள்
ADDED : அக் 03, 2025 10:50 PM

திருப்பூர்:
ஊத்துக்குளி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து கோர்ட் துவங்கப்பட்டது. ஜே.எம்., மற்றும் முன்சீப் நீதிபதி நியமிக்கப்பட்டு தற்போது வழக்கு விசாரணை நடக்கிறது. சொந்த கட்டடம் இல்லாத நிலையில், ஊராட்சி ஒன்றியம் செயல்பட்ட கட்டடத்தில் இந்த கோர்ட் தற்போது செயல்படுகிறது.
தற்போது சப்- கோர்ட் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு புதிய கட்டடம் அமைக்க இடம் தேர்வு நடந்ததில், வருவாய் துறையிடமிருந்து, 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.
அதில், புதிய கோர்ட் வளாகம், நீதிபதி குடியிருப்பு ஆகியன அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், 24 கோடி ரூபாய் மதிப்புக்கு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கோர்ட் வளாகம் கட்டும் பணி கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.
இதனால், ஊத்துக்குளி பார் அசோசியேசன் தலைவர் பெரியசாமி, செயலாளர் சுந்தரராஜூ, அரசு வக்கீல்கள் தமிழ் கார்க்கி, சுப்ரமணியம் ஆகியோர் அமைச்சர் சாமிநாதனை சந்தித்து, ஊத்துக்குளியில் புதிய கோர்ட் கட்டடம் கட்டும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கினர். அரசு தரப்பில் இதற்கான நிதி ஒதுக்கீட்டை விரைந்து பெற்று கட்டுமானப் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டு கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.