/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னைக்கு அ.தி.மு.க.வே காரணம்; அமைச்சர் சாமிநாதன் பாய்ச்சல்
/
குப்பை பிரச்னைக்கு அ.தி.மு.க.வே காரணம்; அமைச்சர் சாமிநாதன் பாய்ச்சல்
குப்பை பிரச்னைக்கு அ.தி.மு.க.வே காரணம்; அமைச்சர் சாமிநாதன் பாய்ச்சல்
குப்பை பிரச்னைக்கு அ.தி.மு.க.வே காரணம்; அமைச்சர் சாமிநாதன் பாய்ச்சல்
ADDED : டிச 06, 2025 05:37 AM
பல்லடம்: பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதனிடம், சின்னக்காளிபாளையத்தில், மாநகராட்சி குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு சாமிநாதன் அளித்த பதில்:
வீதிகளில் குப்பைகள் தேங்காமல் இருக்க வேண்டும் என்பது அந்தந்த பகுதி மக்களின் கோரிக்கை.
அதுபோல், குப்பைகளை தங்கள் பகுதியில் கொட்டக்கூடாது என்பது இன்னொரு தரப்பு மக்களின் கோரிக்கை. இரு தரப்பு கோரிக்கைகளும் நியாயமானதுதான்.
திருப்பூரில் அதிக பிளாஸ்டிக் புழக்கம், அதிகப்படியான தொழிலாளர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை உள்ளன.
இதற்கு ஏற்ப கட்ட மைப்புகள் கடந்த காலத்தில் செய்யப்படவில்லை.
தொலைநோக்கு பார்வையுடன் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இதற்கு முழுக்க முழுக்க அ.தி.மு.க. அரசே காரணம். தி.மு.க. அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம்தான் ஆகிறது.
எனவே, இது தொடர்பான கோர்ட் தீர்ப்பு வெளியானதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இனாம் நில பிரச்னை இனாம் நில பிரச்னையில், பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்ட நிலங்களுக்கு தீர்வு காணவே குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதற்குள், பல்வேறு அமைப்புகள், கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
கோர்ட் உத்தரவு கிடைத்ததும் உரிய தீர்வு ஏற்படுத்தப்படும்.

