/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'முதல்வரை வரவேற்க திரள்வீர்'; அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
/
'முதல்வரை வரவேற்க திரள்வீர்'; அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
'முதல்வரை வரவேற்க திரள்வீர்'; அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
'முதல்வரை வரவேற்க திரள்வீர்'; அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
ADDED : ஆக 10, 2025 11:09 PM
திருப்பூர்; உடுமலையில் இன்று நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க வரும் தமிழக முதல்வரை வரவேற்க திரண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாமிநாதன், தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் அறிக்கை: உடுமலை நேதாஜி மைதானத்தில், இன்று நடைபெற உள்ள விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் 950 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 182 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை துவங்கி வைத்தும், 296 கோடி ரூபாய் மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார்.
உடுமலையில் கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்கும் முதல்வர், பொள்ளாச்சியில், பி.ஏ.பி.,பாசனத் திட்டத்தின் முன்னோடிகளான காமராஜர், சி.சுப்ரமணியம், பழனிசாமி கவுண்டர் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவ சிலைகள் திறந்து வைக்கிறார்.
விழா நிகழ்வுகளில் பங்கேற்கவும், திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் முதல்வரை வரவேற்கும் விதமாகவும், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

