/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமான கோவில் நிலங்கள்; ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
/
மாயமான கோவில் நிலங்கள்; ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
மாயமான கோவில் நிலங்கள்; ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
மாயமான கோவில் நிலங்கள்; ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : ஆக 30, 2025 12:38 AM

பல்லடம்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடம் ஹிந்து முன்னணி சார்பில், 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று, விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் யோகேஸ்வரன், மயில்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது:
தமிழக கோவில்கள் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு சென்ற பின், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகி விட்டது. தமிழகம் முழுவதும், 34 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்ற வழியில்லை. பிற மதத்தினரின் பண்டிகைக்கு செல்லும் முதல்வர் ஏதாவது கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்றுள்ளாரா? நமது கோவில்களையும், கடவுளையும் நாம்தான் பாதுகாக்க வேண்டும். இங்குள்ள ஆட்சியாளர்கள் கடவுளை இழிவுபடுத்துவதற்கு மட்டும்தான் உள் ளனர். வைரமுத்து, திருமாவளவன், எம்.பி., ராஜா என பலர், ஹிந்து மதத்தை புண்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாலிகை எடுத்து வர, செண்டை மேளம், டிரம்ஸ் உள்ளிட்டவற்றுடன் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. என்.ஜி.ஆர்., ரோட்டில் இருந்து ஊர்வலம் துவங்கி, திருச்சி ரோடு, அண்ணா நகர், மாணிக்காபுரம் ரோடு வழியாக ஊர்வலம் சென்றது. நிறைவாக, பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்காலில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

